Homeசெய்திகள்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

-

- Advertisement -
kadalkanni

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்தநாள் மற்றும் 62வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதனையொட்டி மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌.

MUST READ