சன் டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்:
அஜித், நயன்தாரா, அனிகா சுரேந்திரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த விஸ்வாசம் திரைப்படம் நாளை (அக்டோபர் 31) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து விஜய், சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த தெறி திரைப்படம் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் மாலை 6:30 மணி அளவில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்:
நாளை (அக்டோபர் 31) காலை 9:30 மணி அளவில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. மதியம் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. மாலை 6 மணிக்கு அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கின்றன.
விஜய் டிவி
விஜய் டிவியில் மதியம் 12:30 மணி அளவில் பிரசாந்த் வர்மா இயக்கியிருந்த ஹனுமான் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதன் பின்னர் மாலை 5.30 மணி அளவில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.