Homeசெய்திகள்சினிமா'கைதி 2' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் படம் இதுதான்!

‘கைதி 2’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் படம் இதுதான்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.'கைதி 2' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் படம் இதுதான்! அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை இயக்கிய பிரம்மாண்ட வெற்றி கண்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ், மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்தது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகரஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் வெளிவந்த முதல் படமான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 'கைதி 2' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் படம் இதுதான்!இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் 2 திரைப்படத்தை இயக்கப் போகிறாராம். விக்ரம் 2 படத்திற்கு விக்ரம் ரிட்டன்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தின் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து விக்ரம் 2 திரைப்படத்தில் இணைவார் என்று நம்பப்படுகிறது.

MUST READ