Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

-

இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், Mak கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் உலக அளவில் விற்பனையை உயர்த்துவதற்கு, இந்தியாவை தன்னுடைய முக்கிய விற்பனை மண்டலமாக மாற்றிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் கடந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவீதம் குறைந்தாலும், இந்தியாவில் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டது. அதேநேரம் இந்தியாவுக்கு என்று ஆன்லைன் விற்பனை மையத்தை மட்டும் உருவாக்கி உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்திய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்கள் இல்லை.

இதனால் விரைவில், முதல் சில்லறை விற்பனை கடை திறக்கப்பட உள்ளது. அதற்காக ஊழியர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக, ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக சீனாவில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை 75 பில்லியன் டாலராக உள்ளது.

அதுபோன்ற ஒரு விற்பனைக்காக சீனாவில் எடுக்கப்பட்ட அதேபோன்ற நடவடிக்கைகளை இந்தியாவிலும் மேற்கொண்டு வருவதாக, ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார்.

MUST READ