spot_imgspot_img
HomeDiwali Specialஅமரன் படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமரன் படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -
kadalkanni

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  ‘அமரன்’ திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இன்று அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படக்குழுவினருடன் கண்டுகளித்துள்ளனர். அப்போது, அமரன் படக்குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பகிர்ந்து முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

MUST READ