தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்டிரல் – கும்மிடிப்பூண்டி, சென்டிரல் – சூலூர்பேட்டை , சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.