சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் இன்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உலகநாயகன் கமல்ஹாசன் படத்தினை தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராகுல் போஸ் நடித்துள்ளார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் படத்தைக் காண குடும்பம் குடும்பமாக திரண்டு வருகின்றனர். அதேசமயம் அமரன் திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சத்யம் திரையரங்கில் அமரன் திரைப்படத்தை ரசிகர்களுடன் காணவந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன்படி செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், “அமரன் படத்தை நேரம் ஒதுக்கி பார்த்ததற்கு முதல்வர் மு .க. ஸ்டாலினுக்கு நன்றி. நல்ல படத்தை கொடுத்திருப்பதாக முதல்வர் எங்களை பாராட்டினார். முதல்வரும், துணை முதல்வரும் படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற படங்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
‘அமரன்’ படத்தை பாராட்டிய முதல்வருக்கு நன்றி…. சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன் பேட்டி!
-
- Advertisement -