- Advertisement -
ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வீதியில் அலறியடித்து ஓடிய நிலையில், கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் வௌியாகி உள்ளது.
குற்றவாளியின் பின்னணி குறித்து விசாரணை
குற்றவாளியின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாக டிவிட்டர் வாயிலாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.