Homeசெய்திகள்இந்தியாநாட்டில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி

நாட்டில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி

-

நாட்டில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி

இந்தியாவில் முதல்முறையாக இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தில் இருந்து தகவல் வௌியாகியுள்ளது.

அரியானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தசைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எட்டு பேருக்கு H1 N1 வைரஸ் இருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தில் இருந்து தகவல் வௌியாகியுள்ளது. உயிரிழந்த இருவர் அரியானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ