Homeசெய்திகள்‘பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்’:அழைப்பு விடுக்கும் திக

‘பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்’:அழைப்பு விடுக்கும் திக

-

- Advertisement -

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்கிற ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதில், ‘‘பிராமணர்களை அவதூறு பேசுகிறார்களாம்! பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம். பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டுமாம். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களாம்!

தாக்கியவனே காவல் துறையில் முந்திக் கொண்டு புகார் மனு (FIR) கொடுப்பதில்லையா? இந்தத் தந்திரம் பார்ப்பனர்களுக்கானது. அவர்களின் எடுபிடிகளை இப்படி ஏவி விடுகிறார்கள்! இன்றைக்கும் பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டம் நடத்துகிறார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்குப் பூணூல் கல்யாணம் நடத்துகிறார்கள்.

இதன் பொருள் என்ன? நாங்கள் இரு பிறப்பாளர்கள். (துவி ஜாதியினர்) பூணூல் அணிய உரிமை இல்லாத நீங்கள் சூத்திரர்கள் – சூத்திரர் என்றால் விபச்சாரி மகன் (மனுஸ்மிருதி 8ஆம் அத்தியாயம் சுலோகம் 415) என்று பொருள்."ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றாரே மோடி- செய்தாரா?"- கி.வீரமணி கேள்வி!

துவேஷம் செய்பவர்கள் யார்? பெரும்பான்மையினவரான பார்ப்பனர் அல்லாதாரைக் கொச்சைப்படுத்துபவர்கள் யார்? யார்? நாங்கள் பிராமணர்கள் – பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்! நீங்கள் சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று இந்த 2024லும் ஆணவமாக உறுதிப்படுத்த போராட்டம் நடத்துவார்களாம்! நாம் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

தன்மானமுள்ள தமிழர்களே! நவம்பர் 3 மாலை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழக அறவழி ஆர்ப்பாட்ட த்தில் அலை கடலெனத் திரள்வீர்! திரள்வீர்!! நாம் ஒன்றும் சோற்றாலடித்த பிண்டங்களல்ல” எனதிராவிடர்கழகம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MUST READ