Homeசெய்திகள்சினிமாவைரலாகும் 'ஜெய் ஹனுமான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.... ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்த பிரசாந்த் வர்மா!

வைரலாகும் ‘ஜெய் ஹனுமான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்த பிரசாந்த் வர்மா!

-

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பான் இந்திய திரைப்படம் ‘ஹனுமான்’. பக்தி மற்றும் சூப்பர் ஹீரோ தொடர்பான கதைக்களத்தில் வெளியான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பான் இந்திய அளவில் மெகா ஹிட் படமாக அமைந்தது. வைரலாகும் 'ஜெய் ஹனுமான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.... ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்த பிரசாந்த் வர்மா!படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கடவுளான ஹனுமான் கண் விழித்து பூமிக்கு வருவது போன்ற காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ள ‘ஜெய் ஹனுமான்‘ படத்தில் கடவுள் ஹனுமானாக நடிக்கப் போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது. அதைத்தொடர்ந்து படக்குழுவினர் அந்த கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி தான் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஜெய் ஹனுமானாக நடிக்கும் ரிஷப் ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வந்தது. ஏற்கனவே காந்தாரா திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. இவரே ஹனுமானாக நடிக்கப் போகிறார் என்றவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய ஈடு இணை இல்லாத பக்தி மற்றும் அர்ப்பணிப்பினால் ஜெய் ஹனுமான் படம் சாத்தியமாகி இருக்கிறது. மேலும் நம்ப முடியாத மாற்றம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றவை ஜெய் ஹனுமானை உண்மையிலேயே அசாதாரணமானதாக மாற்றி இருக்கிறது. கர்நாடக மண்ணில் பிறந்து உலக அளவில் இருக்கும் உங்களுடைய ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடன் இந்த ஜெய் ஹனுமான் பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ