சென்னை ஒரகடத்தில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையத்தை செயிண்ட் கோபைன் நிறுவனம் அமைக்கிறது. 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த உலகளாவிய மையம் மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய மையத்தில் Glasswool, Gypsum Plasterboards, Plasters, Acoustic Ceilings, Float Glass, Solar Glass, Adhesives, Sealants, Mortars ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், தற்போது உலகளாவிய மையத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி இந்த நிறுவனம் விண்ணப்பம்