Homeசெய்திகள்இந்தியாஜெகன் மோகன் ரெட்டி தாயாரை கொல்ல சதி?... ஷர்மிளாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயார் என...

ஜெகன் மோகன் ரெட்டி தாயாரை கொல்ல சதி?… ஷர்மிளாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயார் என பவன் கல்யாண் உறுதி

-

உங்கள் அண்ணன் ஆட்சியில் பாதுகாப்பு கிடைக்காவிட்டாலும் எங்கள் ஆட்சியில் முழு பாதுகாப்பு வழங்குவோம் என்று ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவிற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி ஆந்திராவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் இருந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா அனந்தபுரம் மாவட்டம் குத்தியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்று கொண்டுருந்தார்.

அப்போது வழியில், கர்னூல் நகரின் பி.கேம்பில் தங்கியிருந்த டாக்டர் அய்யாபுரெட்டி (ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் நண்பர்) வீட்டுக்குச் செல்ல விரும்பினார். இதற்காக கர்னூல் ஆர்.டி.சி. காலனி அருகே கார் சென்றபோது ​​காரின் இடதுபுறம் இருந்த இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் திடீரென வெடித்தன. வாகனம் குறைந்த வேகத்தில் சென்றதால் டிரைவர் உஷாராகி உடனடியாக காரை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவீர்க்கப்பட்டு விஜயம்மா உயிர் தப்பினார். பின்னர் எஸ்கார்ட் வாகனத்தில் அய்யாப்புரெட்டியின் வீட்டுக்குச் சென்று உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரைப் பார்த்தார். அதன் பின்னர் வேறு வாகனத்தில் ஐதராபாத் சென்றார்.

சந்திரபாபு நாயுடு வெற்றி – மோடி, ஸ்டாலின் வாழ்த்து

ஜெகன்மோகன் தாயார் சென்ற வாகனம் ஆறு மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட உயர்ரக சொகுசு கார். அந்த காரின் டயர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் வெடித்ததில் விஜயம்மா உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு விஜயம்மா அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி விட்டார்.

இந்நிலையில் கார் டயர் வெடித்த இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பழைய வீடியோவை தெலுங்கு தேச கட்சி தனது அதிகார பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் சாலையோரம் இருக்கும் இந்த விலையுயர்ந்த கார் யாரோ ஒருவருக்கு உடையது இல்லை. பல கோடி சொத்துக்கு சொந்தக்காரரான ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயம்மா சென்ற வாகனம் இது. அவருடைய புத்தம் புதிய கார், அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட கார் என இவ்வளவு இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு சக்கரங்கள் வெடித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா

இவ்வளவு விலை உயர்ந்த ஹைடெக்கான, புதிய காருக்கு எப்படி இதுபோன்ற விபத்து நடந்தது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் நமது சைக்கோ (ஜெகன் மோகன்) பின்னணியை அறிந்து என்ன நடந்தது என்று யூகித்தனர். இவை அனைத்தும் 2024 தேர்தலுக்கு முன் நடந்தவை.

2019 தேர்தலுக்கு முன் தனது சித்தப்பாவை கொன்றது போல இந்த தேர்தலுக்கு ஜெகன் மோகன் இன்னொரு பெரிய தலையை குறிவைப்பாரா ? என்று ஆந்திர மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம் என அந்த பதிவில் தெரிவித்திருந்தது.

இந்த பதிவு தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவிற்கு முழு ஆதரவு தெரிவித்து தேர்தலிலும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு ஆதரவு திரட்டினார். மேலும் சொத்து பிரச்சனையில் மகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரு கட்சி தலைவரின் (ஜெகன் மோகனின் தங்கை ) என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார். உங்கள் அண்ணன் உங்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்கள் உயிரை நாங்கள் காப்போம். நீங்கள் எங்களை விமர்சிக்கலாம். மதசார்பின்மை இருக்கும் வரை நீங்கள் விமர்சித்தாலும், நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். இது எங்கள் பொறுப்பு. நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக உள்ளீர்கள். எனவே உங்கள் பாதுகாப்பிற்கு விண்ணபித்தால் முதல்வருடன் பேசி உங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறி உள்ளார்.

MUST READ