spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

-

- Advertisement -
kadalkanni

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்காக, நண்பர்கள் குழு நடத்திய தீபாவளி பட்டாசு பரிசு மழை நடத்தப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு விற்பனையை உயர்த்த நடந்த குலுக்கலில், முதல் பரிசு ஒரு லட்சம் மதிப்புள்ள பைக் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

பண்டிகை கால விற்பனையில், பொருட்களை விற்க வழக்கமாக தள்ளுபடி அறிவிப்பார்கள். பரிசு மழை அறிவிப்பார்கள். அந்த அடிப்படையில் கோவையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடையில், சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி பரிசு மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

கோவை வடவள்ளி பகுதியில் ஆறுச்சாமி, சதீஸ் உள்ளிட்டோர் அடங்கிய நண்பர்கள் குழுவினர் வெவ்வோறு தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சக்சஸ் பட்டாசு கடை என்ற பெயரில், தற்காலிக பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்தனர். தீபாவளி சீசனுக்காக மட்டுமே விற்பனை செய்ய, இந்த பட்டாசு கடைக்கு சிவகாசி பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளன. பட்டாசு வாங்கிய வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால், அவர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தீபாவளி பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள பைக், சைக்கிள், மிக்ஸி, வெள்ளி நாணயங்கள் தீபாவளி பரிசாக தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் இன்று குலுக்கல் நடத்தி தீபாவளி பரிசு அறிவித்துள்ளனர். கடந்த முறை 500 பேர் டோக்கன் போட்டிருந்த நிலையில், இந்தமுறை இரட்டிப்பாக 990 பேர் டோக்கன் போடப்பட்டுள்ளது. இன்று குலுக்கள் நடைபெறுவதனை அறிவித்திருந்த நிலையில், பட்டாசு வாடிக்கையாளர்கள் குலுக்களில் பங்கேற்றனர். டோக்கன்கள் குடத்தில் போட்டு குலுக்கி சிறுவர்கள் எடுத்தனர்.

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

இதில் முதல் பரிசாக அக்கா குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கிய கோகுல் என்ற வாலிபருக்கு அடித்திருக்கிறது. கோகுலை பட்டாசு அறிவிப்பாளர்கள் அழைத்து ஃபோனில் தெரிவித்தனர். இரண்டாம் பரிசு ரோகன் என்ற சிறுவனுக்கு அடித்தது. மூன்றாம் பரிசாக மிக்சி மல்லிகா என்ற பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. பத்து பேருக்கும் 5 கிராம் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் பரிசாக விழுந்தன. தீபாவளிக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக, பட்டாசு பரிசுமழையில் நனைந்தனர்.

இது குறித்து தற்காலிக பட்டாசு கடை நடத்திய நண்பர்கள் குழுவில் இருந்த ஆறுச்சாமி கூறுகையில், நாம் ஒருநாளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருந்து விடுகிறோம். ஆனால் அதனை தயாரிக்க தொழிலாளர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். பட்டாசு கொள்முதல் செய்ய சென்றபோது, அவர்களின் வாழ்வாதாரத்தை கண்டு, அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டுமென நண்பர்கள் வட்டத்தில் நினைத்தோம். குறிப்பாக வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பொழுது, தொழிலாளர்கள் உடல் முழுவதும் வெடி மருந்துகளால் நிரம்புகின்றன.

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

குறைந்த ஊதியத்தில் உழைக்கும் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள், கடும் இன்னலுக்கும் உள்ளாகின்றனர். வருடத்தில் ஒரு நாள் பண்டிகையை முன்னிட்டு ஒரு வருடம் முழுவதும் உழைக்கும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு தோய்வின்றி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை அதிகரிப்பின் மூலம் பட்டாசு தொழிலாளர்களுக்கு கூடுதலான ஆஃபர் கிடைக்கும் என்பதனால், பட்டாசு விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் தள்ளுபடியுடன் பரிசு அறிவித்து நண்பர்கள் குழு தற்காலிக பட்டாசு கடை அமைத்ததாக தெரிவித்தார்.

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

சிவகாசி  தொழிலாளர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை மூலமாக கிடைத்த வருமானத்தை கணிசமாக செலவு செய்ய இருப்பதாகவும், இதே போன்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசு மழை மற்ற கடைகளில் அவர்கள் அறிவிக்கும் பொழுது விற்பனை அதிகரித்து தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பைக் வென்ற முதல் பரிசாளர் கோகுல் கூறுகையில், நான் அக்கா குழந்தைகளுக்காக பட்டாசு வாங்கினேன். பரிசு பற்றி கூறும்போது நான் எனக்கு பரிசு விழுமா என்ற கேள்வியோடு எழுதி போட்டேன். ஆன்லைன் மீட்டிங்கில் இருந்தபோது முதல்பரிசு பைக் விழுந்ததாக பட்டாசு கடையில் அழைத்தார்கள். பரிசு அறிவிக்கப்பட்டபோது நம்பவில்ல்லை. நான் டோக்கனுடன் வந்து பார்த்தபோது முதல் பரிசு பைக் வென்றதனை நம்பினேன். சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக எனது பங்களிப்பு இருப்பதனை நினைத்த்து சந்தோசப்படுகின்றேன். சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக அனைத்து தீபாவளி பண்டிகை காலங்களிலும் அனைவரும் பட்டாசு வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சம்பளமா..? கனடாவில் இந்தியத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறும் டாப் 10 வேலைகள்

MUST READ