Homeசெய்திகள்தமிழ்நாடுவக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறிக்க பாஜக அரசாங்கம் சதி... தவ்ஹீத் ஜமாத் மாநில...

வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறிக்க பாஜக அரசாங்கம் சதி… தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

9 லட்சம் ஏக்கர் வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறித்து
பெரும் பணக்காரர்களிடம் வழங்குவதற்காக பாஜக அரசாங்கம் சதி செய்வதாக தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் இன்று அந்த அமைப்பின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.‌ மாவட்டத் தலைவர்‌ ஷபிக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில்,
வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டுவரும் மத்திய பாஜக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வக்பு வாரிய திருத்தச் சட்டத்தில் உள்ள மோசடிகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் விருதுநகரில் வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய அளவில் 9 லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்துள்ள வக்பு வாரியத்திடம் இருந்து புறவாசல் வழியாக நிலங்களை பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது. 44 திருத்தங்களை கொண்டுவந்து வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைத்து மக்களிடம் இருந்து சொத்துக்களை பறிக்க பாஜக அரசாங்கம் செயல்படுகிறது.‌ இஸ்லாமியர்களின் நிலங்களைப் பறித்து பெரும் பணக்காரர்களிடம் வழங்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்கிறது.‌ அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக மிகப்பெரிய போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னெடுக்கும்.

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

வக்பு வாரியத்தில் பிற மதத்தினர் வரலாம் என்று நிலையை கொண்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறையில் திருப்பதி தேவஸ்தானத்தில் எப்படி இந்துக்கள் அல்லாதவர்களை நியமிக்க முடியாதோ, அந்த வேலையை இவர்கள் செய்கிறார்கள்.‌ தற்போது இருக்கக்கூடிய மத்திய பாஜக அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது என கூறினார்.

விஜய் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நடிகை ஷாலினி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுக்குமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அல் அமின், பொதுவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு எதிர்ப்பு என்ற நிலைப்பாடு இல்லை. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களைத் தான் நாங்கள் செய்வோம். விஜய் தற்போது தான் வந்துள்ளார். அவர் எப்படி செயல்படுவார் என்பதை வருங்காலத்தில் பார்க்கலாம் என கூறினார்.‌

MUST READ