Homeசெய்திகள்தீபாவளியை கொண்டாடத்திற்க்காக வந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.

தீபாவளியை கொண்டாடத்திற்க்காக வந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.

-

- Advertisement -

உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த – கொடைக்கானல் – பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

தீபாவளியை  கொண்டாட வந்த  ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பூம்பாறை கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் கோபால கிருஷ்ணன்., இன்று தனது நண்பரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் – வீரபாண்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவரின் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடத்திற்க்காக நண்பர்களுடன் வந்துள்ளார்., சங்கிலியின் தோட்ட கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா் அப்போது நீச்சல் தெரியாத கோபால கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.,

இஸ்லாமியர் அவதாரம் எடுத்த பாஜக வேட்பாளர் ராம்வீர்: ஓட்டுக்காக மாறிய கெட்-அப்

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வாலாந்தூர் காவல் நிலைய போலீசார், சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் கோபல கிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்., கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதி மட்டுமல்லாது கொடைக்கானல் பூம்பாறை ஊராட்சி பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

MUST READ