Homeசெய்திகள்தமிழ்நாடுமொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..

மொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..

-

- Advertisement -
ராணுவத்தில் வேலை.. மொத்தமே 224 பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்களால் திணறிய கோவை..
இந்திய ராணுவத்தில் இணைவதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு எழுத, ஏராளமான வடமாநில இளைஞர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள் சேர்ப்பு தேர்வுகள் இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  174 ராணுவ வீரர் பணியிடங்கள் மற்றும் 50 கிளார்க் பணியிடங்கள் என மொத்தம் 224 இடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் வேலை.. மொத்தமே 224 பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்களால் திணறிய கோவை..

இதனைத் தொடர்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கோவை நோக்கி படையெடுத்துள்ளனர். அதிகளவிலான வட மாநில இளைஞர்களின் வருகையையொட்டி கோவை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் வரும் நாட்களில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோவைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தங்கும் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ