குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்ற நிலையில் ஒரு பார்சலில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி.
பிரியாணி சாப்பிட்ட ராஜேஷ், சுகன்யா, மகேஷ், லக்க்ஷிகா(3) டார்வின்(4 )ஆகியோர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ராஜேஷின் மனைவி ரெபேக்கா அளித்த புகாரில் குன்றத்தூர் காவல்துறையினர் பிரியாணி கடை உரிமையாளர் சையத் அக்பர் பாஷா காதிரி என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரியாணியில் பல்லி இருந்தது தெரியவந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடையில் சோதனை நடத்தி சுகாதாரமற்ற நிலையில் கடை செயல்பட்டு வந்ததால் தற்காலிகமாக கடையை மூடி உள்ளனர்.