நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இவர் கடைசியாக கல்கி 2898AD படத்தில் நடித்திருந்தார். மேலும் தி ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபாஸ். இதற்கிடையில் இவரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சாஹோ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். மேலும் அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவரது உடல் பருமனாக இருப்பதாலும் எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் போவதாலும் சாஹோ படத்திலிருந்து நடிகை அனுஷ்கா நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது நடிகை அனுஷ்கா ஏற்கனவே பாகுபலி, தெய்வத்திருமகள் என பல படங்களில் நடித்த பெயர் பெற்றவர். ஆனால் இவர், ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்காக 100 கிலோ வரை தனது எடையை அதிகரித்துக் கொண்டார். அதன் பின்னர் அவரால் எவ்வளவு முயற்சித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இருப்பினும் கடைசியாக இவர், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.