பெரு நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜுவான் சோக்கா லாக்டா என்ற 39 வயது கோல்கீப்பர் மற்றும் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் அவரது உடலில் பலத்த தீக்காயங்கள் ஆன நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் கால்பந்துப் போட்டி நடைபெற்றுள்ளது.
சில்காவில் நடந்த பிராந்திய போட்டியின் போது, ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா என்ற இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போட்டி நடந்து கொண்டிருந்தபோது கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் வெட்டி உள்ளது. அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஜோஸ் ஹுகோ டி லா குரூஸ் மெஸா என்ற வீரர் மீது மின்னல் தாக்கிய உடன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். மின்னல் தாக்கியதால் மேலும் 5 வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
மின்னல் பாய்ந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு ஜுவான்டெட் பெல்லாவிஸ்டா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22 நிமிடங்கள் மட்டுமே இந்த போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தால் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களும், போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.