Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? -  திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? –  திருமாவளவன் பேட்டி

-

- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? -  திருமாவளவன் பேட்டி

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொடர்வது என்ற உறுதியான நிலைப்பாட்டில் விசிக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் வீசிக்கா இல்லை என உறுதியாக கூறி வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் “திராவிடம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்பதை போன்ற  பிம்பத்தை உருவாக்குகிறார்கள் இது தவறு. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சொல்வது வரலாற்று பிழை. சாதியத்தால் வீழ்ந்தோம் என்பது தான் இந்தியா முழுவதும் நமக்குள்ள முக்கியமான அரசியல். சாதியம் தான் நம்மை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. சாதியத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும். இதிலிருந்து மடைமாற்றும் முயற்சி தான் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்றார் திருமாவளவன்.

 

முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!

MUST READ