Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு சொல்வோம்- மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு சொல்வோம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-ஆவது ஆண்டு நிறுவன நாள் பவள விழா அகில இந்திய மாநாடு சென்னை, கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தேசிய மற்றும் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

rn ravi mkstalin

தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், “உங்களின் ஒருவனாக உங்கள் மாநாட்டுக்கு மன்னிக்கவும்,நமது மாநாட்டுக்கு வந்துள்ளேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் போராசிரியர் காதர் மொய்தீன் உள்ளிட்டோருக்கு நன்றிகள். பேராசிரியர் காதர் மொய்தீன், என்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அவர் அழைத்தால் நிச்சயம் நான் வருவேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் அமைப்பாக மட்டுமில்லாமல் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பாக உள்ளது. பவள விழா கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தி.மு.க. மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கான தொடர்பு இன்று வந்த தொடர்பு அல்ல. அது பாரம்பரியமான தொடர்பு.தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார் அண்ணா மற்றும் கலைஞர் இணைப்புக்கு பாலமே இஸ்லாமிய அமைப்பு தான். பள்ளி காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாக இருந்தவர் முஸ்லிம் தோழன் தான். கலைஞர் உருவாகி வருகிறார் என்று நமக்கு பாடியவர் நாகூர் ஹனிபா. தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் கலைஞர். இஸ்லாமியத்துக்கும், தி.மு.க.வுக்கும் இடையே யான தொடர்பை எந்த கொம்பனாலும் பிரிக்க இயலாது.

சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கள் கலைஞர் எனது அழைக்கும் அளவிற்கு வாழ்ந்தவர் கலைஞர்.‌ முஸ்லிம் சமுதாயத்துக்கு பல்வேறு பங்களிப்பை கலைஞர் செய்து உள்ளார். தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மற்றும் பட்டியல் இன சமுதாயத்துக்கு ஏராளமான திட்டங்களை செய்து உள்ளார். மிலாது நபிக்கு விடுமுறை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரியம், உருது நல வாரியம், காயிதே மில்லத் கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் வழங்கியது என இஸ்லாம் சமுதாயத்துக்கு ஏராளமான திட்டங்களை கலைஞர் செய்துள்ளனர். சிறுபான்மையினர் நல வாரியம் அமைத்தது தி.மு.க. அரசு தான்.

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிதி உதவி, பள்ளிவாசல், தர்கா உள்ளிட்டவைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் நீங்கள் வைக்காத கோரிக்கைகளை நாங்கள் செய்துள்ளேன். அதே போன்று இந்த மாநாட்டிலும் நீங்கள் நிறைய கோரிக்கைகள் முன் வைத்துள்ளீர்கள். நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நீண்ட காலம் சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற‌ உங்கள் கோரிக்கை. இதற்காக ஆதிநாராயணன் தலைமையிலான‌ குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து இன்று கூட இது தொடர்பாக கோப்புகளை பார்த்துள்ளேன். விரைவில் இது தொடர்பாக கோரிக்கை ஆளுநருக்கு அனுப்பப்படும்.

நான் இயக்கத்தால் வேறு பட்டவன். ஆனால் இதயத்தால் ஒன்றுபட்டவன். ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே தேர்தல் இப்படி பேசுபவர்கள் இறையாண்மைக்கு எதிரானவர்கள். ஆன்லைன் சூதாட்ட  தடை மசோதாவுக்கு கூட 4 மாதம் கழித்து தமிழக அரசு நிறைவேற்ற அதிகாரம் இல்லை என சொல்கிறார்கள். அப்படி பட்ட மாநிலத்துக்கு தான் நீங்கள் ஆளுநராக உள்ளீர்கள். இவை அனைத்துக்கும் முடிவு கட்ட 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்டுரைகளும் ஒன்றிணைவோம். திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு சொல்வோம்” என்றார்.

MUST READ