Homeசெய்திகள்ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.

ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.

-

- Advertisement -

பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும்  GLASS MATE என வீரலட்சுமி விமர்சித்துள்ளாா்.

ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும்  GLASS MATE என வீரலட்சுமி விமர்சனம்.

இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் தெலுங்கு மொழி பேசும் மக்களால் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த வீரலக்ஷ்மி தமிழகத்தில் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையிலும் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கிட வேண்டும் என்ற வகையில் கவர்ச்சி நடிகை கஸ்தூரி பேசி வருகிறார் என கடுமையாக பேசினார்.

ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும்  GLASS MATE என வீரலட்சுமி விமர்சனம்.

இப்படி சில மாதங்களுக்கு முன்பாக சீமான் தெலுங்கு மொழி பேசுகின்ற அருந்ததிய மக்களை இழிவு படுத்தி பேசினார். அது சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடிகை கஸ்தூரியின் சீமானும் ஒன்றுதான். இருவரும் கிளாஸ்மேட் என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

அமைதிப்படை திரைபடத்தில் கஸ்தூரி தாயம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது பேசியிருந்தால் எடுபட்டிருக்கும் ஆனால் இப்போது கஸ்தூரி ஆயாம்மாகிவிட்டார் எனவும், அவர் அரைகுறை ஆடையுடன் ஆடிய கவர்ச்சி நடிகை எனவும் தனிபட்ட முறையில் விமர்சனம் செய்த வீரலட்சுமியிடம் இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடலாமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் எல்லா நடிகைகள் குறித்தும் இதுபோன்று பேசவில்லை எனவும், சினிமா வாய்ப்புகள் ஓய்ந்த பின்பு தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் தேவையற்ற மோதலை உருவாக்குவதற்காகவும் தன்னை தமிழச்சி என காண்பித்துக் கொண்டு இப்படி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதால் கஸ்தூரியை அப்படித்தான் அழைப்பேன் எனவும் விமர்சனம் செய்தார்.

விஜய்காக ரஜினியை எதிர்த்தார் சீமான்… அதே விஜய் எங்களையே சீண்டுகிறார்: களஞ்சியம் வேதனை

தன்னை தமிழச்சி என்று கூறி வரும் கஸ்தூரி, கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நான் சொல்வது போல் அவர் சொல்வாரா என கேள்வி எழுப்பினார்.

MUST READ