Homeசெய்திகள்உறவுக்கு இடையூறு... அரக்கனாக மாறிய தாய்: காட்டிக் கொடுத்த காதலனின் டி-சர்ட்

உறவுக்கு இடையூறு… அரக்கனாக மாறிய தாய்: காட்டிக் கொடுத்த காதலனின் டி-சர்ட்

-

அம்மா… என்கிற உறவு, இந்த பூமியில் மிகவும் புனிதமானது, உன்னதமானது. தாயின் மடி உலகிலேயே பாதுகாப்பான இடம். ஒரு தாயும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டால் பொறுக்க மாட்டாள். இப்படிப்பட்ட தன்னலமற்ற உறவை வெட்கப்பட வைத்துள்ளார் ஒரு தாய். தகாத உறவின் காரணமாக அப்பாவி மகளைத் தன் கைகளால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

தேதி மார்ச் 2, 2023, நேரம் சுமார் மதியம் 3 மணி. இடம் காட்கி ரயில் நிலையம், புனே. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வருகிறது. காட்கி ரயில் நிலையத்தை இணைக்கும் சாலையில் ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அழைத்த நபர் கூறுகிறார். போலீஸ் வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வயது சிறுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு சடலமாக கிடக்கிறாள். குழந்தை கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதற்கு முன் அவரது தலையில் கனமான பொருளால் தாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிகிறது. விஷயம் மிகவும் தீவிரமானது. சிறுமியை அடையாளம் காணவும், கொலையாளியை தேடவும் உடனடியாக போலீஸ் தனிப்படை அமைக்கப்படுகிறது. அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியும், எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இறந்தது இரண்டு வயது சிறுமியின் உடல் என்பதால் அதை அடையாளம் காண்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். பல முயற்சிகளுக்குப் பிறகு, காவல்துறைக்கு முதல் தடயம் கிடைக்கிறது. சிசிடிவி கேமராவின் காட்சிகளில், ஒரு ஆணும் பெண்ணும் காட்கி ரயில் நிலையத்திலிருந்து காட்கி சந்தையை நோக்கி ஒரு குழந்தையுடன் நடந்து செல்வதைக் காட்டுகிறது.

தொடர்ந்து, மறுபுறம் பொருத்தப்பட்ட மற்றொரு சிசிடிவி கேமராவில், இருவரும் சிறுமி இல்லாமல் அந்த பகுதியை விட்டு வெளியேறுவதும் தெரிகிறது. இது போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய துப்பு. அந்தக் காட்சிகளில் பார்த்த ஆணும், பெண்ணும்தான் உண்மையான குற்றவாளிகள் என்பதை போலீஸார் புரிந்துகொண்டனர். ஆனால், இருவரையும் அடையாளம் காண்பது போலீசாருக்கு சவாலாக இருந்தது. விசாரணையில் இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாகப் பார்த்த போலீஸாருக்கு இன்னொரு முக்கியத் துப்பு கிடைத்தது. சிசிடிவி கேமராவில் காணப்பட்ட அந்த ஆண் நபர் அணிந்திருந்த டி-சர்ட்டில் பின்புறம் மராத்தியில் ‘சங்கர்ஷ் குரூப், கீர்புரி’ என்று எழுதப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள பாலாபூர் தாலுகாவில் கிர்புரி என்ற கிராமம் உள்ளது. உடனடியாக அகோலா காவல்துறையை தொடர்பு கொண்டு, விசாரணைக்காக ஒரு குழு அங்கு அனுப்பப்பட்டது.

அகோலா காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தியதில் 26 வயதான சந்தோஷ் தேவ்மான் ஜாம்னிக் கைது செய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் அந்த டி-சர்ட் அணிந்து காணப்பட்ட அதே நபர்தான் சந்தோஷ். இதையடுத்து, அந்த காட்சிகளில் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், இந்த 32 வயது பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு முழு கதையையும் கூறினார்.

விசாரணையின் போது, ​​சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி தனது நான்கு குழந்தைகளில் இளையவள். இவரது கணவர் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததால், பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், புனேயில் வசிக்கும் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் தனது இரண்டு வயது மகளுடன் சந்தோஷுடன் வாழ புனே வந்துள்ளார். அவர் தனது மூன்று மூத்த குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். நாட்கள் ஆக ஆக, இருவருக்கும் இந்த இரண்டு வயது சிறுமியை தங்கள் உறவிற்கு தடையாக இருப்பதாக வெறுத்துள்ளனர். ரயில் நிலையத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய நாள் இரவு, அவர்கள் சிறுமியை அடித்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

இதையடுத்து, இருவரும் உடலை காட்கி ரயில் நிலையம் அருகே விட்டுச் சென்றனர். பெண் குழந்தையை கொலை செய்ததாக அந்த பெண் மற்றும் அவரது காதலர் மீது உரிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ