என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு – கே. பாலகிருஷ்ணன்
நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 2-வது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்க செய்ய நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர், முதலமைச்சருடனான சந்திப்பின்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து எடுத்துரைத்ததாகவும், முதலமைச்சருடனான இந்த சந்திப்பு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.