அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றதை அடுத்து, கமலா ஹாரிஸ் தற்போது மீண்டும் வெற்றியை நெருங்கி வருகிறார்.
வெள்ளை மாளிகை பந்தயத்தில் க்அமலா ஹாரிஸை எதிர்த்து ட்ரம்பை வழி நடத்துகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க கோடீஸ்வரருமான எலோன் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், அமெரிக்க கோடீஸ்வரர், “கேம், செட் மற்றும் மேட்ச்” என்று கூறினார்.
இந்தியானா, கென்டக்கி, மேற்கு வர்ஜீனியா, புளோரிடா, ஆர்கன்சாஸ் ஆகிய இடங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்றும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெர்மான்ட், டெலாவேர் மற்றும் நியூ ஜெர்சியில் வெற்றி பெறுவார் என்றும் ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.
சமீபத்திய னிலவரப்படி, ஹாரிஸ் 214 வாக்குகளும், டிரம்ப் 247 வாக்குகளிலும் முன்னிலை வகித்தனர். அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கும் டொனால்டு ட்ரம்பின் பக்கம் பெரிய அளவு பிரபலங்கள் யாரும் இல்லை என்றாலும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வந்தார். ட்ரம்ப் வெற்றி பெற்றால் மட்டுமே அமெரிக்கா முன்னேறும் என மஸ்க் கூறினார்.
டிரம்புக்கு ஆதரவாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ட்வீட்களையாவது பதிவிட்டார். அவற்றில் பெரும்பாலானவை கமலா ஹாரிஸை கிண்டலடிக்கும் பதிவுகளாக இருந்தன.
டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடைபெற்ற போது, “பைடன் அல்லது கமலாவை யாரும் கொலை செய்ய முயற்சிப்பதில்லை” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற டிரம்பின் முயற்சியில் PAC முக்கிய பங்காற்றியது.
ட்ரம்புக்கு ஆதரவாக PAC எனப்படும் அமெரிக்க அரசியல் நடவடிக்கைக் குழுவைத் தொடங்க மஸ்க் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளார்.
ட்ரம்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள டெக்சாசிலிருந்து தனது இருப்பிடத்தை தற்காலிகமாக பென்சில்வேனியாவுக்கு மாற்றினார். அங்கு பட்லர் நகரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப்புடன் பங்கேற்றார். இதே இடத்தில்தான் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி நடத்தப்பட்டது.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்களுக்கு ஆதரவாக ஸ்விங் மாநில வாக்காளர்களிடமிருந்து 1 மில்லியன் கையொப்பங்களை சேகரிப்பதை PAC இன் இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளர் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் $47 வழங்கினார்.