கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ஒரு பயோபிக் படம் என்பதால் ஆரம்பத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் தனது நடிப்பினால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். அதேபோல் ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு பெரும் பலம் தந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 170 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்திய அளவில் இந்த படம் 115 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் விரைவில் 200 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதால் அமரன் படத்தின் வசூல் பாதிக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் கங்குவா திரைப்படம் ரிலீஸாவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் நிச்சயம் அமரன் படம் 200 கோடியை தாண்டி விடும் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.