Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் கட்சி தொடங்கியதில் பிரயோஜனம் இல்லை - ரஜினியின் சகோதரர் பேட்டி..!!

விஜய் கட்சி தொடங்கியதில் பிரயோஜனம் இல்லை – ரஜினியின் சகோதரர் பேட்டி..!!

-

- Advertisement -
rajinikanth - sathayanarayana rao
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது என ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணர் ராவ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகிறார். அவருக்கு எப்போது ரஜினியிடம் இருந்து அழைப்பு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது போன்று செய்யக்கூடாது அது தவறு , ரஜினியை சாமியாக நினைத்து பூஜித்தாள் சாமியே அவருக்கு நல்லது செய்யட்டும்” என்றார்.

vijay

பின்னர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியுள்ளாரே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “வரட்டும்.. கமலஹாசன் முயற்சி செய்தது மாதிரி, விஜய்யும் முயற்சி பண்ணட்டும். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. கட்சி தொடங்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை; ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார் முயற்சி செய்யட்டும். தாமும் அரசியலுக்கு வர வேண்டுமென மனதில் நினைத்து ஆசைப்பட்டிருக்கிறார். வந்து பிறகு என்ன செய்வார் என்று தெரியவில்லை. விஜய் ஆசைப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

மேலும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்திருக்கிறார் விஜய் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு.? “ தமிழ்நாட்டில் இப்போது அது முடியாது; முயற்சி பண்ணட்டும்; ஆனால் ஜெயிக்க முடியாது; கஷ்டம்” என்று தெரிவித்தார்.

MUST READ