வெளுத்து வாங்கும் கனமழை திருவொற்றியூர் மாதவரம் பேருந்து நிலையம் ஜிஎன்டி ரோடு சூழ்ந்த மழை நீர் வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் அவதி
சென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழையால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது சென்னை திருவொற்றியூர் மணலி மாதவரம் பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்கிறது தொடர்ந்து பெய்த கனமழையானது தாழ்வான இடங்களில் மழை நர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றன குறிப்பாக திருவொற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் பெரியார் நகர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது பேருந்து நிலையத்திற்குள் சூழ்ந்த மழை நீரால் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் மழை நீரில் நடந்து சென்று பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்
இதேபோன்று மாதவரம் பேருந்து நிலையம் முன்பு ஜி என்டி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது மழை தொடர்ந்து பெய்வதனால் சாலையிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பேருந்து பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்