Homeசெய்திகள்அரசியல்நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்

நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்

-

- Advertisement -

திருப்பத்துர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேறு நிர்வாகி தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்

நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக தலைமைக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. நான் சொல்வதை கேட்பவர்கள் கட்சியில் தொடரலாம், எதிர் கேள்வி கேட்பவர்கள் கட்சியில் இருந்து விலகி செல்லலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

நாம் தமிழர் கட்சி சர்வதிகார பாதையை நோக்கி செல்கிறது. இங்கே உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று பலர் கட்சியை விட்டு விலகி வெளியேறி வருகின்றனர்.

திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் என்று பல மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே விலகி விட்டனர். அந்த வரிசையில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் விலகி விட்டனர். கட்சியை விட்டு விலகுவதற்கான காரணத்தை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.

அப்போது அங்கே வந்த அக்கட்சியின் குருதி பாசறை நிர்வாகி நாகராஜ், நீ கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் விலகிகொள். ஆனால் அண்ணன் சீமானை பற்றியோ, நாம் தமிழர் கட்சியை பற்றியோ பேசக்கூடாது. அப்படி பேசினால் இங்கே நடப்பதே வேறாக இருக்கும் என்று மிரட்டினார்.

அதற்கு கட்சியில் இருந்து விலகிய தேவேந்திரன், நான் பேட்டி கொடுப்பேன், என் இஷ்டம், அதை கேட்க நீ யாருடா? போடா வெளியே என்று தள்ளினார்கள். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்து வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில் திருப்பத்தூரும் இணைந்து விட்டது.

 

MUST READ