Homeசெய்திகள்இந்தியாம.பி.யில் 2 சிவிங்கி புலிகள் திறந்தவெளியில் விடுவிப்பு

ம.பி.யில் 2 சிவிங்கி புலிகள் திறந்தவெளியில் விடுவிப்பு

-

ம.பி.யில் 2 சிவிங்கி புலிகள் திறந்தவெளியில் விடுவிப்பு

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 2 சிவிங்கி புலிகள் திறந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.


இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு, இதற்கென நமீபியாவுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி முதற்கட்டமாக 8 சிவிங்கி புலிகள் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா அழைத்து வரப்பட்டன. அவற்றை பிரதமர் தனது பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 12 சிவிங்கி புலிகள் சி-17 விமானம் மூலம் இந்தியா வந்த நிலையில், அவை அதே பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்திய சூழலுக்கு பழகிக்கொண்ட சிவிங்கி புலிகளை வனப்பகுதியில் விடுவிக்கும் விதமாக, ஒரு ஆண் மற்றும் பெண் சிவிங்கிப்புலிகள் வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன.

இவை கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா அழைத்து வரப்பட்ட சிவிங்கி புலிகள். இரு சிவிங்கி புலிகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ