Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படத்திலிருந்து 'மன்னிப்பு' பாடல் வெளியீடு!

‘கங்குவா’ படத்திலிருந்து ‘மன்னிப்பு’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கங்குவா படத்திலிருந்து மன்னிப்பு எனும் பாடல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா.'கங்குவா' படத்திலிருந்து 'மன்னிப்பு' பாடல் வெளியீடு! சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11500 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும் ஸ்டைலிஷான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. இவ்வாறு திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வரும் கங்குவா படத்தில் இருந்து மன்னிப்பு எனும் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலை ரகு திக்ஷித் பாடி இருக்கும் நிலையில் விவேகா இந்த பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ