Homeசெய்திகள்கனட பிரதமருக்கு ஆப்பு... அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்

கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்

-

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனாமக செயல்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஆதரவாளருமான எலோன் மஸ்க், ட்ரூடோவின் அரசியல் வீழ்ச்சியை கணித்துள்ளார்.

"ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ. நியமனம்"- எலான் மஸ்க் அறிவிப்பு!
Photo: Elon Musk

வரவிருக்கும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெருவார் என எலோன் மஸ்க் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கனடாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ட்ரூடோவுக்கு இது கடும் சோதனையாக அமைய உள்ளது.

இது குறித்து எலான் மாஸ்க், ‘கனடாவில் உள்ள ட்ரூடோவை அகற்ற எங்களுக்கு உங்கள் உதவி தேவை என அந்நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் கேட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் அவர் அப்பதவியில் இருந்து அகற்றப்படுவார்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சிறுபான்மை அரசை நடத்தி வரும் ஜஸ்டின் ட்ரூடோ மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. ட்ரூடோ 2013 முதல் லிபரல் கட்சிக்கு தலைமையேற்று வருகிறார். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களில் 153 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. சில காலத்திற்கு முன்பு, ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி (என்டிபி) ட்ரூடோவை விட்டு வெளியேறியது.

வாக்கெடுப்பில் பின்தங்கிய நிலையில், ட்ரூடோ கட்சிக்குள் இருந்து அழுத்தத்தையும் எதிர்கொள்கிறார். கடந்த மாதம்தான், அக்கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் குழு, ட்ரூடோவை ராஜினாமா செய்யக் கோரி, அக்டோபர் 28-ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது. அவர் வெற்றி பெற்றால், 100 ஆண்டுகளில் தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகும் முதல் கனேடிய தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

MUST READ