- Advertisement -
புஷ்பா -1 படத்தின் மிகப்பெரிய ஹைலைட் சமந்தாவின் ஊ சொல்றியா.. பாடல் தான். இந்திய அளவில் ட்ரெண்ட்டான இந்த பாடலை அடுத்து, புஷ்பா -2 படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பாடலின் ஒரு பகுதியாக ஷ்ரத்தா கபூர் இருப்பார் என்று ஆரம்பத்தில் வதந்திகள் வந்த நிலையில், தற்போது குறிச்சின்னி மடத்தோப்பேட்டி பாடலின் மூலம் வைரலான ஸ்ரீலீலா தான் நடனமாடியுள்ளார். அவர் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படமும் லீக்காகி உள்ளது.
படத்தின் செட்டில் இருந்து கசிந்த ஒரு புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.இது ஸ்ரீலீலா புஷ்பா 2 படத்தில் அவர் அல்லு அர்ஜுனுடன் ஒரு ஐட்டம் பாடலில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
சமந்தாவிற்கு சரியான போட்டியாக இருப்பாரா ஸ்ரீலீலா ?
சீதையாக இவரா..? நடிகை சாய் பல்லவிக்கு எதிர்ப்பு: காரணம் என்ன?