டெல்லியில் மலர் திருவிழா கோலாகலம்
கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் டெல்லியில் பிரமாண்டமாக தொடங்கியுள்ள மலர் திருவிழாவை ஜி20 நாடுகளின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஜி20 கருப்பொருளுடன் வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் 2 நாள் மலர் திருவிழா நேற்று டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் தொடங்கியது. இதனை ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். விழாவில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் விதமாக விழாவில், பல்வேறு மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் சிற்பங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. விழாவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் மாதிரியை கண்டு ரசித்த பலரும், அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Inaugurated the G20 Flower Festival at New Delhi’s Central Park. It’s a sight to behold. Do visit and experience the vibrancy of colours and positivity at the Festival. pic.twitter.com/68gN5Nw3Xv
— Bhupender Yadav (@byadavbjp) March 11, 2023
ஜி20 உறுப்பு நாடுகளின் பிரசித்திப்பெற்ற மலர் தோட்டங்களை நினைவு கூறும் வகையில், அத்தோட்டங்களின் மாதிரியும், அந்நாடுகளின் தேசிய மலர்களும் விழாவில் இடம்பெற்றிருந்தன. அலங்கார மலர்கள் மற்றும் தாவர வகைகளை பல்வேறு தரப்பினரும் இலவசமாக கண்டு ரசித்தனர்.