Homeசெய்திகள்ஓய்ந்து போன ஓ.பி.எஸ்: நொந்து தனியும் ஆதவாளர்கள்

ஓய்ந்து போன ஓ.பி.எஸ்: நொந்து தனியும் ஆதவாளர்கள்

-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கைப்பற்றிய போதிலும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரயத்தனப் பட்டு வருகிறார்கள். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி செவி சாய்ப்பதாக இல்லை. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரக்தியில் இருந்து வருகின்றனர்.முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? - ஓபிஎஸ்

அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ பத்திரிகையாக ‘நமது எம்.ஜி.ஆர்’நாளிதழ் ஜெயலலிதா காலத்தில் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாறுதல்களால் டி.டி.விதினகரன் அதிமுகவை விட்டு வெளியேறிய பின்னர் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அவர் வசம் சென்றுவிட்டது.

இதனால் ‘நமது அம்மா’ என்கிற பத்திரிக்கையை அதிமுகவுக்கான பிரத்யேக நாளிதழாக கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் இந்த பத்திரிகையை பொருளாதார ரீதியாகக் கவனித்துக் கொண்டனர்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டு விட்டதால் அவரை தனித்து அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது மகன் பிரதீப், நமது அம்மாவில் பணிபுரிந்த பத்திரிகையாளர்களை வைத்து ‘நமது புரட்சித் தொண்டன்’நாளிதழை தொடங்கினார். இதன் தொடக்க விழா எழும்பூரில் அசோகா ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.

ஓபிஎஸ், ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மருது அழகுராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் இந்த நாளிதழில் வெளிவந்து கொண்டிருந்தன. அதிமுகவில் இருப்போரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்த ஓபிஎஸ், எப்படியாவது அதிமுகவிற்குள் சென்றுவிட போராடியும் அதுவும் முடியாமல் போக, பாஜகவும் பாராமுக்ம் காட்ட, புரட்சித்தொண்டனை வறட்சித் தொண்டனாக கைவிட்டுள்ளார் ஓபிஎஸ்.

கடந்த சில மாதங்களாகவே சம்பளம் கொடுக்காததால் அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்கள் புலம்பித்தவித்து வந்துள்ளனர். தீபாவளிக்கும் சம்பளம் வராததால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பத்திரிகையாளர்கள் திரண்டு ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்பிடம் முறையிட்டுள்ளார்கள்.

அதற்கு அவர், ‘‘கட்சிக்கு ஆபீஸ் பிடிக்குறதுக்கே பணம் இல்லாம தடுமாறிக்கிட்டு இருக்குறோம். இது பத்திரிகை பத்தி எல்லாம் யோசிக்கிறதுக்கு நேரம் இல்ல. உங்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுக்குறதுக்கும் இப்ப வழி இல்ல. பேசாம பத்திரிகையை நிறுத்திடுங்க’’ என்று சொல்லி இருக்கிறார்.

இதில் ரொம்பவே அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், தங்களை நம்பி வந்த கட்சிக்காரர்களை நட்டாற்றில் விட்டதை போலவே நம்மளயும் விட்டுட்டாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

MUST READ