பள்ளியில் வளர்க்கும் குறுங்காடை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்.
சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர்கப்பட்ட “குறுங்காடு” வை தலைமைச் செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.
சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுங்காடு வளர்ப்பு, கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரும்போது பொழுது போக்குவதற்காக தொடங்கப்பட்ட மியா வாக்கி காடு வளர்ப்பு திட்டம்.
பின்னர், மாணவர்கள் உதவியுடன் விரிவாக்கப்பட்டது. தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என இணைந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகப்பேர் அரசு பள்ளி வளாகத்தில் சிறிய அளவில் இருந்த தோட்டத்தை குறுங்காடாக மாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.
அதில் மகிளம், வேப்பிலை, அரளி, பூவரசு, புங்கன் போன்ற 48 வகையான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 5000 சதுர அடி பரப்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு மியா வாக்கி காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது.