Homeசெய்திகள்அலுவலக கழிவுகளை விற்பனை: ரூ.2364 கோடி சம்பாதித்த மத்திய அரசு

அலுவலக கழிவுகளை விற்பனை: ரூ.2364 கோடி சம்பாதித்த மத்திய அரசு

-

- Advertisement -
kadalkanni

கடந்த சில ஆண்டுகளாக, குப்பைகளை விற்று, கோடிக்கணக்கில் அல்ல, பல்லாயிரம் கோடி ரூபாயை, மத்திய மோடி அரசு சம்பாதித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குப்பை விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,364 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) தெரிவித்துள்ளது. இந்த குப்பைகள் பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு அரசுக்கு ரூ.650.10 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அலுவலகங்களில் கிடக்கும் கோப்புகள் போன்ற பயனற்ற விஷயங்களை அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த முயற்சியானது அரசாங்க கருவூலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது மட்டுமல்லாமல், அரசாங்கத் துறைகளுக்கு தூய்மை மற்றும் பொருளாதார பங்களிப்பை ஊக்குவித்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர், ‘‘பாராட்டுக்குரியது! திறமையான மேலாண்மை மற்றும் செயலூக்கமான செயல்களில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சி சிறந்த பலனைத் தந்துள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

58,545 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இதில் 15,816 கோப்புகள் நீக்கப்பட்டன. இந்தக் கோப்புகள் மற்றும் குப்பைகளை அகற்றியதன் மூலம் 15,847 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு ரூ.16,39,452 வருவாய் கிடைத்தது.

 

MUST READ