Homeசெய்திகள்சென்னைதமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் - அமைச்சர் சா.மு.நாசர்

தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் – அமைச்சர் சா.மு.நாசர்

-

- Advertisement -

யுனஸ்கோ என்ற பொது நிறுவனம் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுரை வழங்கினார்.

தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் - அமைச்சர் சா.மு.நாசர்

இசை நாட்டிய நாடக கிராமிய கலை விழா நவம்பர் 5 ஆம் தேதி துவங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில், “ஆல்வேஸ் கிரேசி கிரியேஷன்ஸ் ” குழுவினர் வழங்கும் “இனி இவன் இந்தியன் ” சமூக நாடகம் நடைபெற்றது .

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் விஜயா தாயன்பன் தலைமையில் , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்புரையாற்றினார். இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர் நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று நாடகத்தைக் கண்டு ரசித்தனர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயலாளர் விஜயா தாயன்பன் தலைமை உரை …….

அமைச்சர் நாசர் உயர் பதவியில் இருந்தாலும் திமுகவின் தொண்டர் போல் எளிமையாக இயல்பாக பழகும் நல் உள்ளம் படைத்தவர் என்றார்.

தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் - அமைச்சர் சா.மு.நாசர்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என அழகு தமிழில் பெயர் சூட்டினார்.கூடிய விரைவில் பொன் விழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விழாவிற்கு தலைமை தாங்க இருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் நலிந்த கலைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. கலை மாமணி விருது பெற்று நலிந்த கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி கொடுத்துள்ளோம். ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு வருடமும் ஆபரணங்களுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் குடும்ப நலநிதியாக வழங்குகிறோம்.

நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களில் சிலது மட்டும் தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் என்றார்.

சிறுபான்மையின நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது,

43 ஆண்டுகளாக கழக கொள்கைகளை தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இயல் இசை நாடகம் மூலம் விஜயா தாயன்பன் கொண்டு சேர்த்து வருகிறார்.

இந்தியாவில் மட்டும் 1064 மொழிகள் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும்தான் 11 வகையான இலக்கண இலக்கியம் உள்ளது. தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் தான் சிறப்பு வாய்ந்த மொழியை தமிழ்நாட்டின் வீர வரலாற்றினை உலக அளவில் கொண்டு செல்ல முடியவில்லை என்று யுனெஸ்கோ கூறியுள்ளது என்றார்.

ஜான்சிராணி பற்றி உலக அளவில் பேச வைத்த நாம் , நம் தமிழ்நாட்டு வீர மங்கை வேலு நாச்சியாரைப் பற்றி ஏன் பேசுவதில்லை ?

சிவகங்கையின் ஆறு வயது சிறுமி வெட்டுடையாள் செய்த தியாகம்,
சிவகங்கை படைத்தலைவி குயிலி, ராஜராஜ சோழனின் பெருமைகள் ஆகியவற்றை அமைச்சர் சா.மு. நாசர் பேசினார்.

யுனஸ்கோ என்ற பொது நிறுவனம் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் முன்னேற முடியாமல் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தாஜ்மஹாலை கட்டிய கட்டிட கலைஞர்களின் கையை வெட்டப்பட்டது வரலாறு. ஆனால் ராஜராஜ சோழன் தஞ்சை கோவிலை கட்டிய குஞ்சத மல்லர் என்ற கட்டிட கலைஞருக்கு தன்னுடைய பட்டத்தை ராஜராஜ குஞ்சித மல்லர் கட்டிட கலைஞர் என பெயர் வழங்கி சிறப்பித்ததை சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தியும் நேதாஜியும் அடுத்த பிறவி என்னவாக பிறக்க வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு தமிழனாக பிறக்க வேண்டும் என்று தமிழ் மொழியின் சிறப்பு தமிழர்களின் வீரத்தையும் அறிந்து கூறியுள்ளதை நினைவூட்டினார்.

சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்டது…. ‘அமரன்’ குறித்த எதிர்மறை விமர்சனங்களுக்கு ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

 

MUST READ