Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

-

நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி?

நெல்லிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

நெல்லிக்காய் – 20
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காய் தொக்கு செய்ய முதலில் நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கழுவிய நெல்லிக்காய்களை போட்டு கொதிக்க விட வேண்டும். நெல்லிக்காய் நன்கு வெந்த பிறகு அதன் கொட்டையை நீக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

அடுத்தது ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நெல்லிக்காய் பேஸ்டையும் அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பின்னர் கைவிடாமல் கிளற எண்ணெய் பிரிந்து வரும். இப்போது அருமையான நெல்லிக்காய் தொக்கு தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.நெல்லிக்காய் தொக்கு செய்து பார்க்கலாம் வாங்க!

நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெல்லிக்காய் தொக்கு செய்து சாப்பிடலாம். எண்ணெய் அதிகமாக ஊற்றி செய்தால் ஒரு மாதத்திற்கும் கெடாமல் இருக்கும்.

MUST READ