Homeசெய்திகள்தமிழ்நாடுதலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு..

தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு..

-

- Advertisement -
kasturi
kasturi
தலைமறைவாகியுள்ள நடிகை கஸ்தூரியை போலீஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்குபேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினர். இதனால் அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்துகூட எதிர்ப்பு வலுத்து. இதனையடுத்து தெலுங்கு மக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரினார். இருப்பினும் , சர்ச்சை கருத்து தொடர்பாக கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான  காப்பீடு தொகை வழங்க கோரிய வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

அந்தவகையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் , சென்னை எழும்பூர் போலீஸார் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தலைமறைவானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களாக தனிப்படை போலீசார் கஸ்தூரியை தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். உள்நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தனது மனுவில் கஸ்தூரி குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி தாக்கல் செய்த மனு , நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

MUST READ