Homeசெய்திகள்சினிமா100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'!

100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

-

- Advertisement -

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படம் துல்கர் சல்மானை இந்திய அளவில் பிரபலமாக்கியது.100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'! இதைத் தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அதன்படி கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தமிழில் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்த வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ராம்கி போன்ற பலரும் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் இந்த படம் துல்கர் சல்மானின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் 96.8 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 100 கோடி வசூலை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ