மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, சேலம், ஆவடி, தாம்பரம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தலைவர்,செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை அடுத்து நடைபெற்ற மாநில பொதுக் குழு கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்களின் ஓய்வு ஊதியம்,பணிக்கொடை, பணி நேரம், பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அகவிலைப்படியை உரிய நேரத்தில் வழங்கியதற்கும், பணிக்கொடையை 20லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தியதற்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறவேற்றினர்.
அதேபோல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இருந்த 35 ஆயிரம் காலிப்பணியிடங்களை 3417 பணியிடங்களாக குறைக்கப்பட்டதை மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும் மாநகராட்சியில் தனியார் மையத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மாநகராட்சிகளுக்கு என்று தனி மாநகராட்சி நிர்வாக இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எல்லோரும் விரும்பும் திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன் – நடிகர் எஸ் வி சேகர் பேட்டி