சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. எழும்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பிராட்வே, கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 7 செ.மீ., நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.