Homeசெய்திகள்க்ரைம்ஒருதலை காதலால் விபரீதம் - கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!

ஒருதலை காதலால் விபரீதம் – கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!

-

காதலித்த பெண்னை பிரித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதால் பெண்ணின் தந்தையை துப்பாக்கியால் சுட்ட காதலன். கண் பார்வை இழந்த தந்தை புகாரை அடுத்து இளைஞரை கைது செய்த போலீசார்.

ஒருதலை காதலால் விபரீதம் - கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சரூர்நகர், வெங்கடேஸ்வரா காலனி சாலை எண் 14 ல் மல்லிகாராணி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பெரிசெட்டி ரேணுகா ஆனந்த் (57). அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள் உன்னாதி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிப் படிப்பின் போது தனது வகுப்புத் தோழரான கோகிகர் பல்வீருடன் இளைய மகள் உன்னாதிக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்று முதல் பல்வீர் உன்னாதியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். உன்னாதி துண்டிகலில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், பல்வீரும் அங்கு சேர்ந்தார். அங்கும் பல்வீர் தொடர்ந்து காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் உன்னாதி தனது தந்தை ஆனந்திடம் கூறினார். இதனால் ஆனந்த் தனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என பல்வீரை எச்சரித்துள்ளார்.

இதற்கு சில மாதம் அமைதியாக இருந்த பல்வீர் இரண்டு மாதம் முன்பு ஆனந்த் வீட்டிற்கு சென்று உன்னாதியை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். இதை கண்டித்த ஆனந் பல்வீர் பெற்றோரை வரவழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தார். இருப்பினும் பல்வீரால் தனது மகள் வாழ்க்கை பாதிக்கும் என தனது மூத்த மகள் வசிக்கும் அமெரிக்காவிற்கு உன்னாதியை அனுப்பி வைத்தார். இதனால் தனது காதலியை பிரித்ததால் ஆனந்தை கொள்ள திட்டமிட்ட பல்வீர் ஞாயிற்றுக்கிழமை மதியம் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்காக கொண்டு வந்திருந்த ஏர்கன் மற்றும் ஷார்ட் கன் ( துப்பாக்கிகளை ) எடுத்துக் கொண்டு ஆனந்த் வீட்டுக்கு சென்று அவரிடம் சண்டை போட்டு கொண்டே தான் கொண்டு வந்த ஏர் கன் மூலம் சுட்டார். இதில் ஆனந்தின் வலது கண்ணில் தோட்டா பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.

நகைகடையில் 6 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயம் –  ஊழியா் மீது புகாா்

உடனே பல்வீர் அந்த இடத்தை விட்டு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஆனந்தின் காரை தாக்கி பைக்கில் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ஆனந்தை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனந்த் அளித்த புகாரின்படி, வழக்குப் பதிவு செய்து பல்வீரை கைது செய்ததாக சரூர்நகர் இன்ஸ்பெக்டர் சைதிரெட்டி பல்வீரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். பல்வீர் மீது பிஎன்எஸ் பிரிவு 109 மற்றும் 324(4) மற்றும் ஆயுத சட்டம் 1959 பிரிவு 25(1)(பி)(ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ