சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும். கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இதனை தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாபி தியோல் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கின்றனர். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான அடுத்தடுத்த ட்ரெய்லர்களும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழுவினர் கங்குவா திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு திரையிட அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி தமிழகத்தில் கங்குவா திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை, 5 காட்சிகள் திரையிடலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.