அரண்மனை 4-ம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
அரண்மனை 4-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை உருவாக்கினார் இயக்குனர் சுந்தர்.சி.
முதல் இரண்டு பாகங்கள் ஹிட் அடித்த நிலையில் மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இருப்பினும் அரண்மனை நான்காம் பாகத்திற்கான பணிகளை தொடங்கினார் இயக்குனர் சுந்தர் சி அதில் விஜய் சேதுபதி நாயகனாகவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானமும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது இதற்கு சந்தானம் பிறந்தநாளில் மூவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமும் பகிரப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி, சந்தானம் விலக மீண்டும் அரண்மனை 4 படத்தில் நடித்த முடிவு செய்துள்ளார் இயக்குனர் சுந்தர். சி, தமன்னா, ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர், இதன் முதற்கட்ட படைப்பிடிப்பு கடந்த புதன்கிழமை சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.