சென்னை அம்பத்தூரில் பிரபல A2B உணவு பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து. இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல உணவு நிறுவனமான A2B உணவு பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.இங்கு இனிப்பு,காரவகைகள்,உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த நிலையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.பராமரிப்பு மேற்கொள்ளும் ஊழியர்கள் மட்டும் ஆலை உள்ளே இருந்த போது எண்ணெய் பலகாரங்கள் தயாரிக்கும் முதல் தளத்தில் கரும்புகை எழுந்துள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் எண்ணெய்களில் பற்றிய தீ அந்த தளம் முழுவதும் மள மளவென பரவி வானுயர எழுந்தது கரும்புகையானது . இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தண்ணிரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.எனினும் தீயை கட்டுபடுத்த முடியவில்லை இதனையடுத்து அருகாமையில் உள்ள முகப்பேர்,மாதாவரம்,வில்லிவாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனை தொடர்ந்து தீ விபத்து காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்