Homeசெய்திகள்‘அவர் எரிச்சல் குணம் கொண்டவர்...’கௌதம் கம்பீர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல்

‘அவர் எரிச்சல் குணம் கொண்டவர்…’கௌதம் கம்பீர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல்

-

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024 ஆரம்பிக்க உள்ள நிலையில் ரசிகர்களும், வீரர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தொடர் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய பேட்ஸ்மேன் இரண்டு டெஸ்ட் சதங்களை மட்டுமே அடித்திருப்பதால், கோஹ்லியின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது என்று சில நாட்களுக்கு முன் பான்டிங் கூறியிருந்தார். ​​பாண்டிங்கின் கூறியது குறித்து கம்பீரிடம் கேட்டபோது, ‘பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் மற்றும் ரோஹித் பற்றி நான் கவலைப்படவில்லை என்பது மிக முக்கியமான விஷயம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது. கோஹ்லி 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார், ரோஹித் 91 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங், பேசுகையில், ‘கம்பீரின் எதிர்வினையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். கவுதம் கம்பீர்அவர் எரிச்சல் குணம் கொண்டவர். அதனால் அவர் இப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியமில்லை. விராட்கோலியை ‘நான் தாக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். விராட், கடந்த ஆண்டுகளைப் போல் சதம் அடிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு 2018-19 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது இந்த மைதானத்தில் கோஹ்லி சதம் அடித்திருந்தார்.

MUST READ