நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இது தொடர்பாக ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.